வகைப்படுத்தப்படாத

அட்டுலுகம சிறுமி கொலை வழக்கு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

(UTV | கொழும்பு) –  பண்டாரகம – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை உயர் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றவாளி உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 27ஆம் திகதி அன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பாததால் சிறுமி காணாமல் போனதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததைத் தொடர்ந்து சிறுமியின் சடலம் 28ஆம் திகதி அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சேற்று நிலத்தில் இருந்து மீட்கப்பட்டது.

குறித்த விசாரணை CID யிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளின் மூலம் அட்டுலுகம பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

පාන් මිල ඉහළට

Narammala PS member and uncle arrested over assault incident

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில்