வகைப்படுத்தப்படாத

அட்டன் செண்பகவத்தைத் தோட்டத்தில் மண்சரிவு

(UDHAYAM, COLOMBO) –     அட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டெதன் செண்பவத்தைத் தோட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

வீடொன்றின் வாசல் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு குறிப்பிட்ட வீட்டின் கீழ்ப்பகுதியிலுள்ள கூரைப்பகுதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனின் கவனத்துக்குத் தோட்ட மக்கள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அம்பகமுவ பிரதேச செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு அதிகாரிகளை அனுப்பி வைப்பதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை இந்த மண்சரிவு தொடர்பாக அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளதாகவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

Navy apprehends 2 persons with Kerala cannabis

நுகேகொடை திடீர் சுற்றிவளைப்பில் 18 பேர் கைது

මත්ද්‍රව්‍ය භාවිත කරමින් ෆේස්බුක් සාදයක් පවත්වන්නට ගිය පිරිසක් අත්අඩංගුවට