உள்நாடுசூடான செய்திகள் 1

அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் எதிர்வரும் 22 முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அடையாள அட்டையை பெறுவதற்கான ஒரு நாள் சேவை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் ஒரு நாளைக்கு 250 பேரும், காலியில் அமைந்துள்ள அலுவலகத்தில் 50 பேரும் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய அடையாள அட்டையை பெற விரும்புவோர் தமது கிராம உத்தியோகத்தரின் அத்தாட்சி கடிதத்தை தமது பிரதேச செயலாளர் காரியாலயத்தில் உள்ள அடையாள அட்டை கிளை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதற்காக விசேட திட்டங்கள் வகுக்கப்ட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

editor

போலி மலேசியக் கடவுச்சீட்டுடன் நபரொருவர் கைது.

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தினை கூட்டமைப்பு ஆராய்கிறது