உள்நாடு

அடுத்த வாரம் முதல் சீனி விலையை குறைக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – அடுத்த வாரம் முதல் சீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

சந்தையில் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 210 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிற இந்நிலையில், சீனியின் விலையை குறைக்க முடியாது என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன நேற்று தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு அவசியமான சீனி மாத்திரமே கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போதைய நிலையில், சந்தை நடவடிக்கையின் அடிப்படையில், சீனியின் விலையை உடனடியாக குறைக்க முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

எனினும், அடுத்துவரும் மூன்று வாரங்களில் சீனியின் விலையை 190 ரூபா, 180 ரூபா என்ற அளவுக்கு குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொரோனா அச்சுறுத்தல் நிலைமைகளை உடனுக்குடன் அறிய;

காணி அளவீடு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,611 பேர் கைது