உள்நாடு

அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது குறித்து இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அடுத்த வாரம் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (03) இடம்பெறவுள்ளது.

இதன்படி கடந்த வாரம் பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் பாடசாலை கற்கைகள் இடம்பெற்ற விதத்தை மீளாய்வு செய்யும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக கல்வி அமைச்சர், அமைச்சின் மேலதிக செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், பல தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Related posts

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

editor

அரிசி விலை நிச்சயம் குறைவடையும்

editor

91 ஆவது இடத்தைப் பிடித்த இலங்கை கடவுச்சீட்டு

editor