வணிகம்

அடுத்த வாரம் நெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை ஆரம்பம்…

(UTV|COLOMBO) நெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியங்களுக்கு நெல்லைக் கொண்டு வருவதற்கு முடியாத விவசாயிகளுக்காக இந்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, விவசாயிகள் தமது பிரச்சினைகளை அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருகிறது. நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு அனைத்துக் களஞ்சியசாலைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

அலங்கார மீன் வளர்ப்பில் இலங்கைக்கு 12வது இடம்

உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte

கற்றாளை உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை