உள்நாடு

அடுத்த வருடம் முதல் 5G தொழில்நுட்பம்!

(UTV | கொழும்பு) – அடுத்த வருடம் முதல் 5G தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், இணையதள சேவை வழங்குநர்களினால் அறிமுகம் செய்யப்பட்ட 5G தொழில்நுட்பத்துக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி தொடர்பில் ஆலோச்சிக்கப்பட்டவேளை,

தொழில்நுட்ப அமைச்சின் கீழ், மீண்டும் நாடளாவிய ரீதியில் விதாதா தொழில்நுட்ப நிலையங்களை செயற்படுத்துவது தொடர்பில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இக்குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், இச்சந்திப்பின் போது உறுப்பினர்கள் குழுவின் கவனத்தை ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சிக்கு கொண்டு சென்றதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சனல் 4 குற்றச்சாட்டை விசாரிக்க விசேட குழு!

மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

ராஜித – சத்துர இருவருக்கும் கொழும்பு குற்றவியல் பிரிவு அழைப்பு