சூடான செய்திகள் 1

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

(UTV|COLOMBO) அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் சம்பள அதிகரிக்கப்படவுள்ளது.

134 புதிய உதவி சுங்க அத்தியட்சகர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வில் அமைச்சர் கலந்துக்கொண்ட போது இந்த வருட இறுதிப் பகுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் திருத்தியமைப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  ஜுலை 1ம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுங்கத் திணைக்களத்தில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர்  குறிப்பிட்டார்.

 

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை

7 நாடுகளுக்கு இலவச விசா: அமைச்சரவை அனுமதி

பெண்ணின் வயிற்றில் 19.5Kg நிறையுள்ள கட்டி – வெற்றிகரமாக அகற்றி சாதனை