உள்நாடு

அடுத்த புதிய கட்சி மஹிந்த தலைமையில் !

(UTV | கொழும்பு) –    புதிதாக 07 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் தற்போது மஹிந்த அமரவீர தலைமையிலான புதிய அரசியல் கட்சி தோற்றம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் தீர்மானத்தை எதிர்த்து ஒன்பது எம்.பி.க்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டதையடுத்து, கட்சி உறுப்புரிமையைக் கூட இழக்கும் நிலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டது.

அமைச்சர்களாக பதவியேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான தமது அரசியல் பயணத்தை
தொடரும் வகையில் சில வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் தீர்மானத்தை எதிர்த்து ஒன்பது எம்.பி.க்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.

அமைச்சர்களாக பதவியேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான தமது அரசியல் பயணத்தை தொடரும் வகையில் எதிர்காலத்தில் புதிய கட்சியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Related posts

ரயில் தடம்புரள்வு – வடக்கு புகையிரத சேவை பாதிப்பு

பாண் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க கோரிக்கை

ஹரின் பெர்னாண்டோவுக்கு குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் அழைப்பு