உலகம்

அடுத்த ‘ஜி20’ மாநாடு இந்தியாவில்

(UTV | கொழும்பு) –   அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   ஜி-20 இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் கடந்த இரு நாட்களாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தோனேசியா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

இந்தியா, சீனா, அமெரிக்கா,இங்கிலாந்து , பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து ஜி-20 உச்சி மாநாடு கடந்த 16மற்றும் 17 ஆகிய தினங்களில் நடைப்பெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான், இந்திய பிரதமர் மோடி,சீன ஜனாதிபதி ஜின்பிங், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றனர்.இதன்போது ‘ஜி20’ அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடோடோ, பிரதமர் மோடியிடம் முறைபடி ஒப்படைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘ஜி20’ அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்பது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரியவிடயம் என தெரிவித்தார்.அதன் படிஅடுத்த ஆண்டு (2023) டிசம்பர் 1 ஆம் திகதி ஜி-20 மாநாட்டை இந்தியாவில் நடைபெற உள்ளது.

 

Related posts

வெளிநாட்டவர்களுக்கு மறு அறிவித்தல் வரை சவூதி அரேபியா தடை

சர்ச்சையாக இருந்த ஜாக் மா பொது நிகழ்ச்சியில்

இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு