விளையாட்டு

அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற மும்பை இந்தியன்ஸ்…

(UTV|INDIA) ஐ.பி.எல். கிரிக்கட் தொடரின் அடுத்த சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் தகுதி பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோதியது.

மேலும் இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மும்பை 162 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், பதிலளித்தாடிய சன்ரைசர்ஸ் அணியும் 162 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்து போட்டி டிராவில்  நிறைவடைந்தது.

அடுத்து சுப்பர் ஓவர் வீசப்பட்டது.

இதில் சன்ரைசர்ஸ் 8 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ், மூன்று பந்துகளில் 9 ஓட்டங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.

அதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் தொடரின் ப்லேய் ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மூன்றாவது அணியாக இணைந்துள்ளது.

 

 

 

Related posts

75 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்ற இலங்கை

வனிது ஹசரங்க அணியில் இருந்து நீக்கம்

இங்கிலாந்திடம் ஆஸி வீழ்ந்தது