சூடான செய்திகள் 1

அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் (குறிப்பாக மே 29ஆம், 30ஆம் திகதிகளில்) சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

மேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

சாய்ந்தமருதுவில் வெள்ளை வேன் கடத்தல் – விழிப்பாக இருக்குமாறு பள்ளிவாசல் எச்சரிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு பிரதான நீதிவான் பரிசோதனையின் கீழ் கொச்சிக்கடை ஆலயம்…