உள்நாடு

அடுத்த இரு வருடங்களில் தொழில் வழங்குவதற்கு வழியில்லை

(UTV | கொழும்பு) – அடுத்த இரண்டு வருடங்களில் தொழில் வழங்குவதற்கு வழியில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெலியத்த பிரதேசத்தில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கான சுற்றறிக்கையை நிதியமைச்சு வெளியிட்டு வேலை வாய்ப்புகளை மட்டுப்படுத்தியுள்ளதாகவும், அதன் விளைவாக 10 தொழிற்சாலைகள் அமைக்கப்படும் எனவும், எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் முதலாவது தொழிற்சாலை திறக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

“.. திஸ்ஸமஹாராம வாக்காளர்கள் சுற்றுலாத்துறையில் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். தங்காலைக்கு முன்பு போல் சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை என்பதை நாம் அறிவோம். தங்காலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், நெடுஞ்சாலையிலிருந்து விலகியிருக்கும் பெலியத்த முற்றத்தைக் கடந்து செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். இந்தப் பகுதிகளிலும் லாபம் ஈட்டுவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்கி வருகிறோம். நாங்கள் இப்போது அந்த திட்டத்தில் வேலை செய்கிறோம். அதன் மூலம் சிறப்பான பொருளாதார லாபத்தை ஈட்ட முடியும். சீதனமலுவ பிரிவில் மேலும் சில வீதிகள் தரைவிரிப்பு செய்யப்பட உள்ளன. அதையும் சரி செய்து விடுகிறேன்.

பள்ளி பிரச்சினையை பேசி தீர்வு காண்போம். மற்ற பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காண்போம்.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டு, இந்த உதவிகள், கடன்கள், முதலீட்டாளர்கள், வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் மானியங்கள் அனைத்தையும் பெரும் சவால்களுடன் வழங்குகிறோம். கொவிட் 19 காரணமாக நாட்டின் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. அப்படி இருந்தும் நாம் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறோம்…”

Related posts

வெடுக்குநாறி சிவராத்திரி சம்பவம்: 08 பேர் நீதிமன்றில் ஆஜர்

எரிபொருள் கப்பலுக்கான விலையினை ஈடு செய்ய முடியாதுள்ளது

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு