(UTV | கொழும்பு) – தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 14ம் திகதியும் பயணக் கட்டுப்பாட்டை நீக்க முடியாது என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொழும்பு நகரில் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அத்தியாவசிய துறையைப் போன்று இயக்கப்படுகின்றன.
பணியாளர்கள் நாளாந்தம் தங்களது பணிகளுக்கு செல்வதால், கொழும்பு நகரம் தொடர்ந்தும் சனநடமாட்டம் உள்ள இடமாகவே இருக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில், அடுத்தவாரமும் பயணத் தடையை நீக்க முடியாத நிலைமையே நிலவுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)