உள்நாடு

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது

(UTV | கொழும்பு) – அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியிலும் மற்றைய நபர் மாத்தளை பகுதியிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 46 வயதுடைய நபர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கை வந்தவர் எனவும் அடிப்படைவாதத்தை பரப்பும் நோக்கில் நிதி சேகரித்துள்ளவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 49 வயதுடைய சந்தேக நபர் அடிப்படைவாதத்தை பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார். 

Related posts

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணை

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்