உள்நாடு

அடிப்படைவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் இருவர் கைது

(UTV |  மட்டக்களப்பு) – அடிப்படைவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் குறித்த இரண்டு சந்தேகநபர்களும் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்,

அண்மையில் கட்டாரில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆறு பேரில் இவர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

அவர்களுடன் நாடு கடத்தப்பட்ட ஏனைய நால்வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (TID) ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதன் போது 28 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தனர்,

Related posts

எரிபொருள் விலை சூத்திரம் குறித்த தீர்மானம் நிதி அமைச்சுக்கு

கடலில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பல்: சாரதிக்கு தடை! கப்பலை பொறுபேற்ற இலங்கை அரசு

அரச ஊழியர்களின் சேவைக்கான அங்கீகாரத்தை வழங்குவோம் – சஜித்

editor