கிசு கிசு

அடர்ந்த காட்டில் மாயமான பெண் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு?

(UTV|AMERICA) அமெரிக்காவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் காணாமல் அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தை சேர்ந்த 35 வயதுடைய யோகா பயிற்சியாளரான அமண்டா எல்லர் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தை சேர்ந்த 35 வயதுடைய யோகா பயிற்சியாளரான அமண்டா எல்லர் கடந்த 8-ம் திகதி மக்கோவா நகரில் உள்ள வனப்பகுதிக்கு தனது காரில் சென்றுள்ளார்.

பின்னர் அவர் அங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு வனப்பகுதிக்குள் நடந்து சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பவில்லை. இதையடுத்து அமண்டா எல்லர் குடும்பத்தினர் அவரை கைத்தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றனர்.

ஆனால் அவர் கைத்தொலைபேசி, பணப்பையை காரிலேயே விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் மாயமானதாக கருதி அவரது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான அடர்ந்த காடு என்பதால், அமண்டா எல்லரை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை, அமண்டா எல்லர் கண்டுபிடிக்கப்பட்டார்.

கார் நின்ற இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகே அமண்டா எல்லர் இருப்பதை மீட்பு குழுவினர் கண்டனர்.

மேற்படி இவர் 2 கால்களும் பலத்த காயம் அடைந்த நிலையில் நகர முடியாதபடி அமண்டா எல்லர் அமர்ந்திருந்தார். மேலும் அவர் மிகவும் மெலிந்தும், சோர்வாகவும் காணப்பட்டார்.

இதையடுத்து, மீட்பு குழுவினர் அவரை பத்திரமாக மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருடைய காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்.

 

 

 

 

Related posts

சவப்பெட்டிகளுடன் பிணவறை முன்பாக காத்திருக்கும் உறவுகள்

செவ்வாய் கிரகத்தில் ஓக்சிஜன் உற்பத்தி செய்ய நாசா திட்டம்

எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்