கிசு கிசு

அடங்கியது இரணைதீவு

(UTV |  கிளிநொச்சி) – கொவிட்19 தொற்றினால் மரணிக்கும் சடலங்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.

இரணைதீவில் குறித்த சடலங்களை புதைப்பதற்கு தொழில்நுட்ப குழு அனுமதியளித்திருந்த நிலையில் அதற்கு பல்வேறு தரப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே கடந்த தினம் இது குறித்து கலந்துரையாடியதாகவும் இதன்போது இரணைதீவில் கொவிட்19 சடலங்களை புதைப்பதற்கான தீர்மானம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Related posts

முஸ்லிம் கடைகளில் மலட்டுத் தன்மை கொத்து, உள்ளாடைகள் இப்போது இல்லையா? [VIDEO]

டிக்-டாக் காணொளிகளுக்கு அடிமையான பிரபலத்திற்கு நேர்ந்த சோகம்!

சீனாவின் மற்றுமொரு மைல்கல்…(VIDEO)