உள்நாடு

‘அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் ஜெனீவா செல்வோம்’ – டில்வின்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அடக்குமுறைகள் குறித்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்தை ஈர்க்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“மக்களை எதிர்ப்பைத் தூண்டும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணிகள் மாற்றப்பட வேண்டும். கேட்கும் கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்காததால், நம் நாட்டு சாமானியர்கள் வீதியில் இறங்கி வருகின்றனர்.

அடக்குமுறை என்ற ஆயுதம் கையில் எடுக்கப்படுவது வலிமையின் காரணமாக அல்ல. பலவீனம் காரணமாக. இவை ரணில் விக்கிரமசிங்கவின் துணிச்சல் இல்லை இவை கோழைத்தனம். வலுவான அரசுகள் போராட்டங்களுக்கு அஞ்சுவதில்லை. அரசு பலவீனமாக இருந்தால், சிறு எதிர்ப்புகளுக்குக்கூட அஞ்சுகின்றனர். ரணில் விக்கிரமசிங்க வந்து பலவீனங்களை அதிகப்படுத்தியுள்ளார்.

ரணில் எதிர்ப்பாளர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் ரணில் பொறுப்பேற்ற பின்னர் மேலும் வலுவிழந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்புகளுக்கு அஞ்சுகிறார். போராட்டத்தில் இருந்தவர்கள் வேட்டையாடப்பட்டால், பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால், இந்நிலைமைகளை மக்கள் தடுத்து நிறுத்துவார்கள். எனவே, இந்த இடைவெளியை அரசுக்கு வழங்கக் கூடாது என்று மக்களுக்கு கூறுகிறோம். இந்த அரசாங்கத்தை தோற்கடிக்காமல் காப்பாற்ற முடியாது. இத்தகைய தீய, தோல்வியடைந்த, பயந்து, அதிர்ச்சியடைந்த அரசால் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. அடக்குமுறை நிறுத்தப்படாது. ஏற்கனவே பல மனித உரிமை வழக்குகள் இலங்கைக்கு வந்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அடுத்த மாதம் ஜெனிவாவில் கூடவுள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக பெருமளவிலான இலங்கையர்கள் ஆணைக்குழுவின் முன் சென்று பாராளுமன்றத்தை கலைத்து அடக்குமுறையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். ஒரு சிறிய கிளர்ச்சியால் கூட அரசு வீழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது. உண்மைகளை திணித்து இந்த அரசு வாழ முடியாது. பொருளாதார நெருக்கடியை மக்கள் மீது சுமத்துவதற்கு எதிராக போராடும் மக்களை அடக்க முயலும் அரசாங்கம் கூடிய விரைவில் தோற்கடிக்கப்பட வேண்டும்”.

Related posts

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 30 பேர் கைது

இலங்கையின் காப்புறுதி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை !

பிரேமலால் ரீட் மனு தீர்ப்பு திங்களன்று [UPDATE]