உள்நாடு

அஜர்பைஜானில் இறந்த 3 இலங்கை பெண் மாணவிகளின் உடல்கள் இலங்கைக்கு [VIDEO]

(UTV | கொழும்பு) – அஜர்பைஜானில் இறந்த மூன்று இலங்கை பெண் மாணவிகளின் உடல்கள் இன்று(15) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

அஜர்பைஜான் நாட்டில் உள்ள சபைல் (Sabail) இல் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் அந்நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவிகள் மூவர் அண்மையில் உயிரிழந்திருந்தனர்.

குறித்த மாணவிகள் தங்கியிருந்த வீட்டு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, புகையை சுவாசித்தமையின் காரணமாகவே உயிரிழந்து விட்டதாக குறித்த செய்தியில் கூறப்பட்டிருந்தனர்.

21, 23, மற்றும் 25 வயதுடைய மூன்று யுவதிகளே இவ்வாறு உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது ; நாளை புனித நோன்புப் பெருநாள்

மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

அம்பாறையை அச்சப்படுத்திய சம்பவம் ; ஒருவரின் நிலை கவலைக்கிடம்