கேளிக்கை

அசுரன் ரீமேக்கில் பிரபல நடிகை

(UTV|INDIA) – தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் திரைக்கு வந்த வெற்றிபெற்ற திரைப்படம் அசுரன். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை நிகழ்த்தியது.
இந்த நிலையில் அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கி உள்ளன. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர்.

ற்போது பிரியாமணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதேபோல் இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

அஜித் என் கனவு நாயகன்?

சோனாக்ஷி இனது ‘I Love You’

சீனாவில் ரிலீஸாகவுள்ள ரஜினியின் 2.0