உள்நாடு

அசாத் சாலி தொடர்பான விசாரணைகள் நிறைவு – சட்டமா அதிபர்

(UTV | கொழும்பு) –    முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

அசாத் சாலி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளின் போதே, சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய ஊடக மாநாடு தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை உரிமை மீறலாகும் எனத் தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ரிஷாட் எம்.பி!

மைத்திரி தலைமையில் SLFP விஷேட மத்திய செயற்குழுக்கூட்டம்

LAUGHS மற்றும் LITRO எரிவாயு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு