சூடான செய்திகள் 1

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று(21) கையளிப்பு

(UTV|COLOMBO)-அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை இன்று(21) நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை சம்பந்தமாக உண்மையை கண்டறிவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

அதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த ஒரு குழுவின் அறிக்கை இன்று அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் அறிக்கை எதிர்வரும் 25 ஆம் திகதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட வுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

SJBயில் தான் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை :அர்ஜுன ரணதுங்க

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் அதிரடி அறிவிப்பு

editor

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]