விளையாட்டு

அக்சர் படேலுக்கு கொரோனா

(UTV |  இந்தியா) – டெல்லி கெபிடல்ஸ் அணியின் சகலதுறை வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் திகதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இதில், ஏப்ரல் 10ஆம் திகதி சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கெபிடல்ஸ் அணிகள் வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் சகலதுறை வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையெடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மொத்தம் 10 நாட்கள் வரை தனிமை முகாமில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குமுன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் நிதிஷ் ராணாவுக்கு கொரோனா உறுதியானது. அதேபோல், மும்பை வான்கடே மைதானத்தின் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்மித், வோனர் இருவருக்கும் 1 வருட போட்டித்தடை

21 சதங்களை கடந்த உலகின் 4ஆவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா

பத்மபூசன் விருதை பெற்றார் தோனி