தெஹியங்கையைச் சேர்ந்த அக்குரனை அஸ்னா பள்ளி முன்னாள் தலைமை இமாம் அல்-ஆலிம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் மரணித்த விட்டார் என்ற செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (17) வெள்ளிக் கிழமை ஜுமுஆ குத்பா செய்து முடிக்கும் நேரத்திலே அவர் மரணித்திருக்கிறார். அதுவே அவரது இறுதி நேரம்.
மென்மையான சுபாவம் கொண்ட பாயிஸ் முர்ஸி அவர்களது பாவங்களை மன்னித்து, அல்லாஹ் அன்னாருக்கு மேலான சுவர்க்கத்தின் உயர் பதவிகளை வழங்குவானாக! என நாம் அனைவரும் இரு கரம் ஏந்தி இறைவனை பிரார்த்திப்போம்.