உள்நாடு

அக்கரைப்பற்று வலய மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வு!

(UTV | கொழும்பு) –

அக்கரைப்பற்று வலய, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய “மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வு” நேற்று பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு பாடசாலை சமூகத்தின் அழைப்பின் பேரில் அக்கரைப்பற்று மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஞாபகார்த்தமாக, பாடசாலையில் மரக்கன்றுகளும் நீதிபதியினால் நடப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஏ.கமறுந் நிஸா, உதவி அதிபர்களான எம்.எச்.மஹ்மூத் நஸீம், கே.எல்.எம்.சமீன், ஏ.ஜே.எம்.றினீஸ் ஆகியோருடன் வலய தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்தும் நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா அவர்கள் உரையாற்றும்போது, மாணவச் செல்வங்கள் என்று விழிப்பதற்கு காரணம் மாணவர்கள் செல்வங்களாகும். நாட்டின் சொத்துக்கள் இந்த மாணவச் செல்வங்களாகும். இவர்கள் தொடர்பாக நான் அடிக்கடி கவலை கொள்கின்ற சில சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
போதைப்பொருள் தொடர்பாக மாணவர்களாகிய உங்களுக்கு மத்தியில் சில விடயங்களை முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.
இந்த மாணவச் செல்வங்களுக்கு நல்ல விடயங்களைப் பற்றி எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற பல்வேறுபட்ட விடயங்களை பற்றி யோசித்திருக்கின்றேன் இருந்த போதும் வெவ்வேறுபட்ட நபர்களை வளவாளர்களாக கொண்டு இந்த விடயங்களை கூறினாலும் நேரடியாக ஒரு நீதிபதி கூறுவது சாலப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

குறிப்பாக ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களுக்கு பல விடயங்களை, நல்லுபதேசங்கள் கூறி இதில் ஒரு சிலராவது அந்த விடயத்தை ஏற்று நடந்தால் என்னுடைய மேய்ப்பாளர்கள் என்ற கடமையிலிருந்து நான் இறைவனிடத்தில் பூரணத்துவம் அடைந்தவனாக எண்ணிக் கொள்ள முடியும் என நான் நம்புகின்றேன்.
அண்மைக்காலமாக சிறுவர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் போதைப்பொருள் பாவனை மட்டுமல்லாது போதைப்பொருள் விற்பனையாளர்களாக மாணவர்கள் மாறி இருக்கின்ற துர்ப்பாக்கிய நிலை எமது பிரதேசங்களில் ஏற்பட்டிருக்கின்றது.
இது ஆரோக்கியமான விடயமல்ல. இந்த போதைப் பொருள் மாபியாக்கள் என்போர் ஒரு சாதாரண மாபியாக்களாக
அல்லாமல் சர்வதேச வலைப்பின்னல் ஊடாக இயங்கி வருகின்ற, மாணவர்களை நோக்கி அவர்களின் இலட்சியங்களை அழிப்பதற்காக செயற்பட்டு வரும்
பல வலைப் பின்னல்களின் கூட்டிணைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

போதை மாபியாக்கள் தங்கள் வியாபாரத்தை மிக இலகுவாக செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டி செயற்பட்டு வருகின்றார்கள். என்பதை நினைத்து நான் பல சந்தர்ப்பங்களில் மன வேதனை அடைந்திருக்கின்றேன். இது ஒரு சாதாரணமான விடயம் அல்ல, மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றா கும். இதனை உங்களிடம் நான் ஏன் கூறுகின்றேன் என்றால் இதனை நீங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதற்காக அல்ல, தற்பொழுது நீங்களே இலக்கு வைக்கப்பட்ட குழுக்களாக இருந்து கொண்டிக்கின்றீர்கள். அதனால் என்றைக்கோ ஒரு நாள் நீங்களும் இந்த சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகமாக இருந்து கொண்டிருக்கின்றன
என்ற உண்மையை நான் கூறி வைக்கின்றேன்.

உங்களுடைய வயது ஆலோசனை கூறுபவர்களை எதிரியாக பார்க்கின்ற ஒரு வயதாகும். அதனால் சில சந்தர்ப்பங்களில் சில மாணவர்கள் ஆசிரியர்களை எதிரிகளாக பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். நீதிபதியாக உங்கள் முன் பேசிக்கொண்டிருக் கின்ற நான், தற்பொழுது எனது மாணவப்பருவத்தை எண்ணிப் பார்க்கின்றேன். சுவாரசியமாக துள்ளித் திரிந்து விளையாடிய அந்த காலத்தை மீட்டுக் கொள்கின்றேன். உண்மையிலேயே அந்த காலத்தில் வறுமையுடன் கூடிய பல கசப்பான அனுபவங்களை சந்தித்திருந்தாலும் ஆசிரியர் ; மாணவர் என்ற உறவு மிகச் சிறப்பு மிக்கதாக காணப்பட்டது.
நான் இப்பொழுதும் எனக்கு கற்பித்த ஆசிரியர்களை காண்கின்ற போது உளத்தூய்மையுடன் மரியாதை செலுத்துகின்ற வழக்கமுடையவனாக இருந்து கொண்டிருக்கின்றேன்.

இன்று நிலைமை வேறாக இருக்கின்றது. ஆசிரியர்களை மதிக்காத, ஆசிரியர்களை தாக்குகின்ற அளவுக்கு பிற்போக்கான நிலைமை இன்று உருவாகி இருக்கின்றது. இது ஒரு ஆரோக்கிய சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அம்சமாக கொள்ள முடியாது.
இவ்வாறு ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் பல்வேறு வகையான துன்பங்களுக்கு ஆளாக்கப்படுகின்ற நிலைமைகளையும் நாளாந்தம் எம்மால் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாங்களாகவே உருவாக்கிய சூழ்நிலைகளே ஆகும்.

எனவேதான் அன்புக்குரிய மாணவர்களே, நீங்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பளித்து ஒழுக்க விழுமியங்களில் மேலோங்கி நடப்பீர்களேயானால், உங்களது சிப்பான இலட்சியங்களை இலகுவாக அடைந்து கொள்ள முடியும் என்ற விடயத்தை எனது சொந்த அனுபவத்திலிருந்து சுட்டிக்காட்டுகின்றேன் என்றும் கூறினார்.


.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாவனல்லை – 36 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

வெளிவிவகார அமைச்சர் – மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

“இன்றைய இளைஞர்களுக்கு இறந்தகாலம் மறந்து விட்டது”