சூடான செய்திகள் 1

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் கைது

(UTV|COLOMBO)-அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற பிடியாணைக்கு அமைவாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.அந்த உத்தரவுப்படி அவர் ஆஜராகாமையின் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி இன்று(17) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

 

 

 

Related posts

பாதீடு தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையால் அனுமதி

மதுபானசாலைகளுக்கு பூட்டு

கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி