உள்நாடுசூடான செய்திகள் 1

அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டத்தை உட­ன­டி­யாக கையளிக்கவும் – சவூதி அரே­பியா

(UTV | கொழும்பு) –   அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டத்தை உட­ன­டி­யாக பய­னா­ளி­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கு­மாறு சவூதி அரே­பியா, இலங்கை அர­சாங்­கத்­திடம் கோரிக்­கை­யொன்றை முன்­வைத்­துள்­ளது.

இந்த விடயம் தொடர்­பி­லான கோரிக்­கைகள் கொழும்­பி­லுள்ள சவூதி அரே­பிய தூது­வ­ரா­ல­யத்தின் ஊடாக இலங்கை அர­சாங்­கத்­திடம் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் இன்று வரை எந்­த­வொரு காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­யி­னையும் முன்­னெ­டுக்­க­வில்லை.

பய­னா­ளி­களின் பாவ­னைக்கு இந்த வீட்டுத் திட்டம் கைய­ளிக்­கப்­ப­டா­மை­யினால் வீட்டுத் திட்டம் பற்றைக் காடாக மாறி­யுள்­ளது. கடந்த 2004ஆம் ஆண்டு நாட்டில் ஏற்­பட்ட சுனாமி அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக சவூதி அரே­பி­யா­வினால் 500 வீடு­களைக் கொண்ட மன்னர் அப்­துல்லாஹ் மாதிரி நக­ர­மொன்று அம்­பாறை மாவட்­டத்தின் நுரைச்­சோலை கிரா­மத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. கிழக்கு ஆசி­யாவில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நிவா­ரண­த்திற்­கான சவூதி தேசிய பிரச்­சாரம் என்ற நிறு­வ­னத்­தி­னா­லேயே இந்த வீட்டுத் திட்டம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.

அக்­கா­லப்­ப­கு­தியில் சவூதி உள்­துறை அமைச்சின் கீழ் காணப்­பட்ட இந்த நிறு­வனம்- இன்று, நிவா­ரணம் மற்றும் மனி­தா­பி­மான நட­வ­டிக்கை­க­ளுக்­கான மன்னர் சல்மான் நிலை­யத்தின் கீழ் செயற்­ப­டு­கின்­றது. இந்த வீட்டுத் திட்டம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக 2011.06.09ஆம் திகதி அலரி மாளி­கையில் வைத்து இலங்கை அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்­கப்­பட்­டது. எனினும், நாட்­டி­லுள்ள இன விகி­தா­சா­ரத்தின் அடிப்­ப­டையில் இந்த வீட்டுத் திட்­டத்­தி­லுள்ள வீடுகள் கைய­ளிக்­கப்­பட வேண்டும் என தொடரப்பட்ட 178/2008ஆம் இலக்க வழக்­கிற்கு உயர் நீதி­மன்றம் 2009.12.02ஆம் திகதி தீர்ப்­ப­ளித்­தது. எவ்­வா­றா­யினும், அக்­க­ரைப்­பற்­றி­லுள்ள இன விகி­தா­சா­ரத்தின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த வீட்டுத் திட்­டத்­தி­லுள்ள வீடுகள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என முஸ்லிம் சமூ­கமும் அதன் மக்கள் பிர­தி­நி­தி­களும் தொடர்ச்­சி­யாக கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர்.

இதனால் குறித்த வீட்டுத் திட்டம் உரிய பய­னா­ளி­க­ளுக்கு வழங்­கப்­ப­டாமல் ஒரு தசாப்­தத்­திற்கு மேலாக இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலை­யி­லேயே குறித்த வீட்டுத் திட்­டத்­தினை உட­ன­டி­யாக பய­னா­ளி­க­ளுக்கு வழங்­கு­மாறு கொழும்­பி­லுள்ள சவூதி அரே­பிய தூது­வ­ரா­லயம் இலங்கை அர­சாங்­கத்­திடம் கோரிக்கை முன்­வைத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இதே­வேளை, உயர் நீதி­மன்ற தீர்ப்பின் பிர­காரம் நாட்­டி­லுள்ள தேசிய இன விகி­தா­சாரப்படி இந்த வீட்டுத் திட்­டத்­தினை கைய­ளிக்க வேண்டும் என்ற விடயம் கடந்த 12ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற அம்­பாறை மாவட்ட அபி­வி­ருத்தி குழுக் கூட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்­டது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்­ட­மா­னினால் முன்­வைக்­கப்­பட்ட முன்­மொ­ழி­விற்கு ஆத­ர­வான கருத்­துக்­களே இக்­கூட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எனினும், இதனை நிரா­க­ரித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ், “அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்தில் வாழும் மக்­களின் இன விகி­தா­சாரப் படியே இந்த வீட்­டுத்­திட்டத்­தினை வழங்க வேண்டும்” என்று வாதிட்­டுள்ளார்.

இதி­லுள்ள வீடு­களை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வழங்­காமல் எங்கோ இருக்கும் சம்­பந்­தமே இல்­லாத மக்­க­ளுக்கு கைய­ளிக்க முனை­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தென்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீஸ் இந்த கூட்­டத்தில் குறிப்­பிட்­டுள்ளார். இதன் காரணமாக குறித்த கூட்டத்தில் இந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. எவ்வாறாயினும், இந்த விடயம் நீதிமன்றத்துடன் தொடர்புடையது என்பதனால் சட்டமா அதிபரை மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் தீர்மானமொன்றை மேற்கொள்ள இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.-

RifthiAli

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

தேசிய பட்டியல் விவகாரம் – இன்று கலந்துரையாடல் 

வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை-அமைச்சர் ராஜித