உள்நாடுசூடான செய்திகள் 1

UPDATE: அக்கரைப்பற்றில் தீ பிடித்த படகு : தேடுதல் வேட்டை மும்முரம்

(UTV | கொழும்பு) –

அக்கரைப்பற்று கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த படகு ஒன்றை தேடும் விசேட நடவடிக்கையை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர். அக்கரைப்பற்று கடற்பரப்பில் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதாக கடற்படையினருக்கு நேற்று இரவு (16.07.2023) தகவல் கிடைத்துள்ளது.அதன்படி, திருகோணமலை கடற்படைத் தளத்துக்குச் சொந்தமான டோரா கப்பல் மூலம் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நள்ளிரவு 1 மணிக்குப் பின்னரும் தீப்பிடித்த படகு தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த பகுதியில் கடற்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை கரையோர ஆழ்கடலில் தீப்பற்றி எரிந்த வாழைச்சேனை மீனவர்களின் படகு.

 

(எஸ்.அஷ்ரப்கான்)

வாழைச்சேனையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற படகு ஒன்று நேற்று (16) இரவு ஒலுவில் துறைமுகத்துக்கு நேரே ஆழ்கடல் பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த படகில் ஐந்து மீனவர்கள் கடல் தொழிலுக்காக சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தகவல் அறிந்து மீனவர்களை மீட்பதற்காக கடற்படையின் சிறிய படகு ஒன்று அவ்விடத்தை நோக்கி விரைந்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதற்கிடையே அம்பாறைப் பிராந்திய கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள பல ஆழ்கடல் மற்றும் சிறிய ரக மீன்பிடிப் படகுகளும் தீப்பற்றி எரியும் படகு நிலைகொண்டுள்ள பிரதேசத்தை நோக்கி நகர்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தற்போது  மீன்பிடிப் படகில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சேறு பூசும் பிரச்சாரம் தொடர்பில் ஹரின் CCID இல் முறைப்பாடு

குருநாகல் பஸ் நிலையத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு (PHOTOS)

பேக்கரி பொருட்களின் விலையினை அதிகரிக்க கோரிக்கை