வகைப்படுத்தப்படாத

ஹோண்டுராஸ் அரசின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு 58 வருட சிறைத் தண்டனை

(UTVNEWS|COLOMBO) – சட்ட விரோமாக சொத்து சேகரித்த குற்றச்சாட்டில் ஹோண்டுராஸ் அரசின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ரோசா எலீனாவுக்கு 58 வருட சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரோசா எலீனா சட்டவிரோதமாக சொத்து சேகரித்த குற்றச்சாட்டில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு 58 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் சர்வதேச கொடுப்பனவுகள் மற்றும் பொதுவான கொடுப்பனவுகள் மூலம் வழங்கப்பட்ட 07 லட்சத்து 79 ஆயிரம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக கையாண்டார் என ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியொருவரின் மனைவியான ரோசா எலீனா போனிலா மீது அந்நாட்டு சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அமெரிக்காவின் விஷேட கணக்காய்வு ஒன்றியம் என்பன விசாரணைகளை மேற்கொண்டுவந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ரோசா எலீனா போனிலா தங்க ஆபரணங்கள் கொள்வனவு, மருத்துவ செலவுகள் மற்றும் அவரது பிள்ளைகளின் மேலதிக கற்றல் வகுப்புகளுக்கான செலவுக்காக இந்த பணத்தைப் பாவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சட்டவிரோத பணப்பாவனைக்கு, முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு நெருக்கமானவரான சாவுல் எஸ்கொபர் எனபவருக்கும் 48 வருடகால சிறைத்தண்டனையை அந்நாட்டு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Related posts

මුත්තයියා මුරලිදරන්ගේගේ ක්‍රිකට් දිවිය සිනමා නිර්මාණයකට

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம்

SLPP signs MoU with 10 political parties