உலகம்

ஹொண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் ஹொண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸுக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அமெரிக்க நீதிபதி ஒருவர் இன்று வழங்கினார்.

இதனையடுத்து 55 வயதான ஹெர்னாண்டஸ், அவர் எதிர்பார்க்கும் மேல்முறையீடு வெற்றிபெறும் வரை, தமது வாழ்நாள் முழுவதையும், சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் அவரை குற்றவாளியாக அறிவித்தது. கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான போதைப்பொருள் ஏற்றுமதிகளைப் பாதுகாப்பதற்காக மில்லியன் கணக்கான டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதற்காக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது இந்தநிலையில், பிராதிவாதியின் சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரருக்கு ஆயுள் தண்டனையை கோரினர், எனினும் நீதிபதி அதனை நிராகரித்தார்

 

Related posts

வெளிநாட்டு பயணிகளுக்கான தடையை நீக்கியது இந்தியா

கொவிட் 19 தொடர்பிலான வதந்திகளை பதிவிட தடை

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?