உள்நாடு

ஹேரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு தடுப்பு காவல் உத்தரவு

(UTV|ஹொரனை ) – ஹெரோயின் மற்றும் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் தொடர்பில் 7 நாள் தடுப்பு உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகம பிரதேசத்தில் சுமார் 200 கோடி ரூபாய் பெறுமதியான 192 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 10 நவீன கைத்துப்பாக்கியுடன் இரண்டு பெண்கள் உட்பட மூன்று சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேகநபர்கள் மேல் மாகாண குற்றப்பிரிவினரால் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு குறித்த தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான மாத்தறை மல்லி என்ற நபரின் மனைவி என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல

ஜும்ஆத் தொழுகைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி