சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் குடு ரஜா கைது….

(UTV|COLOMBO)-மாதம்பை – சுதவெல்ல பகுதியில் 3 கிராம் 170 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஜொர்ஜ் பிரியந்த குமார என்ற குடு ரஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் போதைப்பொருள் விற்பனை மற்றும் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

27 வயதான சந்தேக நபர் சுதுவெல்ல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வெளி மாவட்டங்களில் இருந்து போதைப்பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

எதிர்காலத்தில் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்-வைத்தியர் ஷாபியின் விசேட குரல் பதிவு (video)

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி தலைவர் நாடு திரும்பினார்