சூடான செய்திகள் 1

ஹுங்கம துறைமுகத்தில் தீ

(UTV|COLOMBO) ஹுங்கம – குருபொத்துன துறைமுகத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 20க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (26ஆம் திகதி) அதிகாலை இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related posts

அவிசாவளை – தல்துவ பகுதியில் அமைதியின்மை – பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

இன்று(25) இரவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு.

பதுளை சம்பவம்-மாணவியை கர்ப்பமாக்கிய சந்தேகநபர் கைது