கேளிக்கை

ஹிந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கம் – படக்குழு விளக்கம்

(UTV|இந்தியா) – நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தி மொழில் உருவாகிவரும் “மைதான்” என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்த திரைப்படத்திற்காக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையையும் குறைத்திருந்தார். அத்துடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு ஒரு சில காட்சிகளிலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், அந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக நடிகை பிரியாமணியை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து படக்குழு கூறுகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் மைதான் திரைப்படத்தில், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார் எனவும், ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவர் உடல்வாகு ஒத்துப்போகவில்லை எனவும் கூறியுள்ளது.

Related posts

சிம்பு – த்ரிஷா திருமணம் – குழப்பமடைந்த T.ராஜேந்தர்

பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்

பிரபல பாலிவுட் நடிகர் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு