உள்நாடு

ஹிட்லரின் இனவெறிப் பேச்சுக்களையும் மிஞ்சி : முஸ்லிம்களுக்கு எதிராக பேசும் மோடி

இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான, கேடுகெட்ட, இழிவான, அயோக்கியத்தனம் மிக்க இனவெறியும் அதிகார வெறியும் கொண்ட பிரதமர் தான் மட்டுமே என்பதை நரேந்திர மோடி மீண்டும் நிரூபித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை, ஹிட்லரின் இனவெறிப் பேச்சுக்களையும் மிஞ்சியது. இந்திய நாட்டில் வாழும் 20 கோடிக்கும் அதிகமான சிறுபான்மை முஸ்லிம்களை மோடி நேரடியாக தாக்கியுள்ளார்.

வகுப்புவாத துருவ முனைப்பை வலுப்படுத்தி வாக்குகளைப் பெறத் துடிக்கிறார்.

குஜராத்தில் முஸ்லிம் படுகொலைகளை மூலதனமாக்கி ஆட்சியைப் பிடித்த வரலாற்றைக் கொண்ட அரசியல்வாதி நரேந்திர மோடி. மோடியின் விரல் நகங்களிலும் பற்களிலும் அந்த ரத்தக்கறை இன்னும் இருக்கிறது.

அன்றைய நாட்களில் அவர் உலக நாடுகளில் நுழைவதற்கு தடையை எதிர்கொண்டார். இப்போது அதே நச்சு வார்த்தைகளை உமிழ்ந்து ஆட்சியை தக்க வைக்க மோடி முயற்சிக்கிறார். முஸ்லிம் அந்நியப்படுதலை தனது முதல் மற்றும் கடைசி ஆயுதமாக பிரதமர் மாற்றியுள்ளார். உலகில் எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இவ்வளவு வெளிப்படையாக இன விஷத்தை கக்கும் ஆட்சியாளர் இருக்கிறார்களா என்பது சந்தேகமே.

நாட்டின் சிவில் சமூகம் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் பலத்த அடியை கொடுக்க வேண்டும். கொடுக்கும். இந்த இனவாத வெறித்தனத்தை கேள்விக்குள்ளாக்குவதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் முழு நாடும் ஒன்றிணைய வேண்டும்.

K.S. அப்துல் ரஹ்மான்,
மாநிலத் தலைவர், வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு

JM

Related posts

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை நீடிக்க தீர்மானம்

editor

பயணியுடன் வாக்குவாதம் – காதை கடித்த பஸ் நடத்துனர்

இயற்கையின் கோரம் : 23 வயதுடைய யுவதியின் சடலம் மீட்பு