கிசு கிசு

ஹரியை கொலை செய்யவேண்டும்?

வேறு இனத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தமைக்காக பிரிட்டிஸ் இளவரசர் ஹரியை கொலைசெய்யவேண்டும் என பிரிட்டனின் நவ நாஜிகள் தெரிவித்துள்ளது.

மேகன் மேர்க்கெல் வேறு இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை திருமணம் செய்த ஹரியை கொலை செய்யவேண்டுமென பிரிட்டனின் சொனொன் கீரீக் பிரிவு எனப்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட அமைப்பு இணையத்தில் இளவரசர் ஹரியின் தலையை துப்பாக்கி இலக்கு வைக்கும் படத்தை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட படத்தில் இனத்துரோகி என்ற வாசகத்தையும் காணமுடிகின்றது.

இதேவேளை இந்த குழுவினர் ஐந்து கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பிபிசி இந்த குழுவில் பிரிட்டனின் பல்கலைகழக மாணவன் ஒருவரும் பதின்மவயது இளைஞர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட அமைப்பினர் மேற்கொண்ட உரையாடல்களை விசாரணைக்கு உட்படுத்தியவேளை இவர்கள் பொலிஸாரை கொலை செய்யவேண்டும் என்ற கருத்தை கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த பல மாதங்களாக பல நூற்றுக்கணக்கான இணைய உரையாடல்களை ஆராய்ந்த வேளை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள நவநாஜிகள் இனவெறி பெண்களிற்கு எதிரான வெறுப்பு வன்முறை மற்றும் ஈவிரக்கமற்ற தன்மையை ஊக்குவித்து வருகின்றமை புலனாகியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

Related posts

தண்டனைக்கு முகம் கொடுக்க நான் தயார்…

இரண்டாவது அலைக்கு காரணம் சீதுவ – நட்சத்திர ஹோட்டலே : முழுமையான விபரம்

இணையத்தில் பிரபலமான பூனை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது