சூடான செய்திகள் 1

ஹட்டன் மற்றும் கண்டி பஸ் சேவை பணிபகிஷ்கரிப்பு

(UTV|COLOMBO)  ஹட்டன் தொடக்கம் கண்டிவரை பயணிக்கும் தனியார்துறை பஸ் உரிமையாளர்கள் மற்றும் அரச போக்குவரத்து பஸ்கள் இன்று போக்குவரத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஹட்டன் தொடக்கம் கண்டி வரை பயணிக்கும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களை நாவலப்பிட்டி பொது பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து ஹட்டன் தொடக்கம் நாவலப்பிட்டி பொது பஸ் தரிப்பு நிலையத்தின் ஊடாக கண்டிக்கு பயணிக்கும் தனியார்துறை பஸ் உரிமையாளர்கள் மற்றும் அரச போக்குவரத்து பஸ்கள் இன்று போக்குவரத்து பணிபகிஷ்கரிப்பை ஹட்டன் மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் மையமாக வைத்து ஈடுப்பட்டுள்ளனர்.

அதனால் ஹட்டன் தொடக்கம் கினிகத்தேனை, நாவலப்பிட்டி ஆகிய வழியாக கண்டிக்கு செல்லும் தனியார் போக்குவரத்து சபைக்கான பஸ்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ்கள் சேவையிலிருந்து விலகியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல் ஹட்டன் தொடக்கம் கண்டி வரையிலான பயணிக்கும் அனைத்து பயணிகளும் பஸ் சேவையின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ள நிலையில், போக்குவரத்து அசௌகரியங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர்.

 

 

 

Related posts

ஐக்கிய தேசிய கட்சியால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

இன்றைய காலநிலை…

பேரூந்தில் இரத்தினகல்லை திருடியவர் கைது: வெள்ளவத்தை சம்பவம்