உள்நாடு

ஹட்டன் – ‌நுவரெலியா பிரதான வீதியில் விபத்து

ஹட்டன் – ‌நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் வேன் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் வேனில் சென்ற மற்றுமொருவரும் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (26) காலை 5 மணி அளவில் நிகழ்ந்துள்ளது குறித்த வேன் டிக்கோயா பகுதியில் உள்ள வாகன திருத்தம் நிலையத்துக்கு சென்று லிந்துலை மட்டுகலை தோட்டத்திற்கு செல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சாரதி வாகனத்தை செலுத்தும் போது ஏதோ ஒரு விஷப்பூச்சி தன்னை தாக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சாரதி பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த விபத்தில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம் முற்றாக சேதம் அடைந்துள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கோப் மற்றும் கோபா கூட்டங்கள் ஒத்திவைப்பு

குறைந்த செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை கோரும் CEB பொறியியலாளர்கள்

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் முறைமையில் மாற்றம்