விளையாட்டு

ஹசிம் அம்லாவின் அதிரடி சதத்தினை வீணாக்கிய பட்லர், ராணா (வீடியோ இணைப்பு)

(UDHAYAM, COLOMBO) – ஐ.பி.எல். 10 ஆவது தொடரின் 22 ஆவது போட்டி இந்­தூரில் நேற்று இரவு நடை­பெற்­றது. இந்தப் போட்­டியில் மெக்ஸ்வெல் தலை­மை­யி­லான பஞ்சாப் அணியும் ரோஹித் ஷர்மா தலை­மை­யி­லான மும்பை அணியும் மோதின.

[accordion][acc title=”இந்தப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற மும்பை அணி, பஞ்­சாபை முதலில் துடுப்­பெ­டுத்­தா­டும்­படி பணித்தது.”][/acc][/accordion]

[ot-caption title=” இதைத் தொடர்ந்து முதல் இன்­னிங்ஸை தொடங்­கிய பஞ்சாப், ஆரம்பம் முதலே அதி­ரடி காட்­டி­யது. இந்த ஐ.பி.எல். தொடரில் இது­வரை சோபிக்­காத தென்­னா­பி­ரிக்­காவின் அம்லா, 60 பந்­து­களில் 104 ஓட்­டங்­களைக் குவிக்க பஞ்சாப் அணி, முதல் இன்­னிங்ஸில் அதிக ஓட்ட எண்­ணிக்­கையைப் பெற வித்­திட்டார்.” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/04/ARS9078.jpg”]

[ot-caption title=”பின்னர் களமிறங்கிய மெக்ஸ்வெல், 18 பந்­து­களில் 40 ஓட்டங்­களைக் குவித்தார். இதனால் பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்­களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்­றது.” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/04/ARS9068.jpg”]

[ot-caption title=” 199 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆட்டத்தை ஆரம்பித்தது மும்பை.” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/04/ARS9068-1.jpg”]

[ot-caption title=”அந்த அணியின் முதல் மூன்று துடுப்­பாட்ட வீரர்களான பார்த்திவ் படேல், ஜோஸ் பட்லர் மற்றும் நிதிஷ் ராணா முறையே 37, 77, 62 ஓட்டங்களைக் குவித்தனர்.” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/04/ARS9044.jpg”]

[ot-caption title=”இதனால், 199 ஓட்டங்கள் என்ற இமா­லய இலக்கை 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 16ஆவது ஓவரிலேயே எட்டிப் பிடித்தது மும்பை அணி.” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/04/ARS8626.jpg”]

[ot-caption title=”இந்தப் போட்டியில் வெற்றியடைந்ததன் மூலம், புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது மும்பை.” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/04/ARS9021.jpg”]

[ot-video][/ot-video]]

 

Related posts

ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்குமாறு அமெரிக்க அதிபர் கோரிக்கை

மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றி…

ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து டோனி அசத்தல்