உள்நாடு

ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

(UTV|கொழும்பு) – பாதாள உலகக்குழுத் தலைவரான ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் முல்லேரியா பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெனியா மற்றும் பிரசன்ன என்று அழைக்கப்படும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து 5 கிராம் மற்றும் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

புதிய மின்சார சட்டம்: ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைத்து, அமைச்சருக்கு கூடிய அதிகாரம் : சஜித் குற்றச்சாட்டு

யாழில் நாளைய தினம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை

editor

டயானா கமகேவுக்கு 5 நாட்களுக்கு பயணத்தடை இல்லை