உள்நாடு

ஹக்கலை விபத்தில் மூவர் பலி : ஒருவர் கவலைக்கிடம்

(UTV | நுவரெலியா) – நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் பலியானதாகவும், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

நுவரெலியாவிலிருந்து எல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முன்னால் பயணித்த கனரக வாகனம் ஒன்றின் தடுப்புத் தொகுதி செயற்படாமல் போனதால், முச்சக்கரவண்டியின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நுவரெலியா பொலிசார் தொிவித்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அதன் சாரதி காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

அஹிம்சாவழிப் போராட்டத்திற்கு தயாராகுங்கள் – சாணக்கியன்.

இன்று இரவு 10.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

editor

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்

editor