வணிகம்

ஸ்ரீலங்கா டெலிகொம் அணியை வீழ்த்திய HNB Finance இன் விற்பனை சேவைகள் C பிரிவு அணி

(UTV | கொழும்பு) – இறுதிச் சுற்றுப் போட்டியில் ஸ்ரீலங்கா ரெலிகொம் அணியை 91 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றி கொண்ட HNB FInance அணியின் விற்பனை சேவைகள் C பிரிவு போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

‘NDB சவால் கிண்ணம்’ கிரிக்கெட் போட்டி NDBஇன் பிரதான அனுசரணையுடன் விற்பனை சேவைகள் கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விற்பனை சேவைகள் C பிரிவு போட்டிகள் 50 ஓவர் போட்டி மாதிரியின் கீழ் இம்முறையும் கொழும்பு நகரை கேந்திரமாகக் கொண்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்ரீலங்கா ரெலிகொம் (SLT) மற்றும் HNB FInance ஆகிய அணிகள் ஒன்றையொன்று மோதின.

ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இரு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடிய போது HNB Finance அணியை நான்கு விக்கெட்டுகளால் இலகுவாக ஸ்ரீலங்கா ரெலிகொம் அணி வெற்றியீட்டியிருந்தமை விசேட அம்சமாகும்.

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற SLT அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு HNB Finance அணியை பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய HNB Finance அணி தமது 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் HNB Finance அணி சார்பில் சனோஜ் தேஷிக்க பந்து 68 பந்துகளில் 56 ஓட்டங்களைக் குவித்ததோடு பந்து வீச்சில் SLT அணி சார்பில் இன்சங்க சிறிவர்தன 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய SLT அணி 34.1 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இதில் நிமேஷ் மென்டிஸ் 45 பந்துகளில் அரைச் சதம் ஒன்றை பெற்ற போதிலும் அது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கவில்லை. HNB Finance அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய தருஷ பெர்னாண்டோ 6.1 ஓவர்களில 13 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் அவரது துல்லியமான பந்து வீச்சின் காரணமாக இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, 6 போட்டிகளில் 54 ஓவர்களை வீசி 159 ஓட்டங்களுக்கு 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய HNB Finance அணியின் உமேஷ் மொராயஸ் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளராகவும், 4 இன்னிங்ஸ்களில் ஒரு சதத்தையும் ஒரு அரைசதத்துடன் 62.25 துடுப்பாட்ட சராசரியாக 249 ஓட்டங்களைப் பெற்ற பான் ஏசியா வங்கியின் சந்தரு சந்திரிக்க விக்ரமரத்ன போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் ஒட்டுமொத்த போட்டித் தொடரில் 169 ஓட்டங்கள் மற்றும் 175 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்களை வீழ்த்திய கொமர்ஷல் வங்கியின் கிம்ஹான் ஆஷிர்வாத போட்டி நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

HNB Finance தமது 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சனோஜ் தர்ஷிக்க 56 ஓட்டங்களையும், முதித்த பெர்னாண்டோ 46 ஓட்டங்களையும் விந்திக்க சந்திரசிறி 41 ஓட்டங்களையும், தருஷ பெர்னாண்டோ 24 ஓட்டங்களையும் ஜனித் பெரேரா 24 ஓட்டங்களையும் பெற்றதோடு இன்ஷங்க சிறிவர்தன 47 ஓட்டங்களைக் கொடுத்த 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலளித்தாடிய SLT அணி 34.1 ஓவர்களில் 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதில் நிமேஷ் மென்டிஸ் 56 ஓட்டங்களையும், சச்சின் திவங்கத்த 27 ஓட்டங்களையும், இன்ஷக சிறிவர்தன 21 ஓட்டங்களையும் தருஷ பெர்னாண்டே 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், அயேஷ் மதுசங்க 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

Related posts

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கைக்கு கடன் உதவி வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி

பொருட்கள் கொள்வின் போது அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தல்