உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரேரணைக்கு ஜனாதிபதி மறுப்பு

(UTV | கொழும்பு) –  ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்காத இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பியதாச, தற்போதைய அரசியல் முட்டுக்கட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் முன்னர் அரசாங்கத்தில் அங்கம் வகித்த 11 கட்சிகளும் சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவதே தமது பிரதான முன்மொழிவாகும் என்றார்.

ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இடைக்கால நிர்வாகத்தில் அங்கம் வகிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கருதுவதாக ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் ஜனநாயக முறையிலான தேர்தலை நடத்துவதற்கு அவர்கள் முன்மொழிந்துள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி இந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், இந்த நடவடிக்கையானது நாட்டில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மையை மேலும் மோசமாக்கும் எனவும் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

நிலையான நிர்வாகம் இல்லாமல் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

என்னைப் பற்றி வெளியான செய்தி உண்மை இல்லை ரங்கே பண்டார

editor

போதைப் பொருளுக்கு அடிமையான கிராம அலுவலர் கைது!

சுமார் 580 ஆண்டுக்கு பிறகு இன்று நீண்ட சந்திர கிரகணம்