விளையாட்டு

ஸிம்பாப்வே டெஸ்ட் அணியின் புதிய தலைவர் நியமனம் 

(UTV|ஸிம்பாப்வே ) – ஸிம்பாப்வே டெஸ்ட் அணியின் புதிய தலைவராக ஷேன் வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் ஒருநாள் சர்வதேச மற்றும் 20 க்கு 20 அணிகளைஇ சமு சிபாபா இடைக்கால அடிப்படையில வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுடன் இருபதுக்கு – 20 தொடரின் பின்னர் இம்மாத இறுதிப்பகுதியில் ஸிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு வீரர்களுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

ஸிம்பாப்வே – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இம்மாதம் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 27ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்றன. போட்டிகள் ஹராரே மைதானத்தில் இடம்பெறுகின்றன.

Related posts

முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் கொரோனாவுக்கு பலி

சகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம்

மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார் சஹீட் அப்ரிடி