உள்நாடு

ஷானி விவகாரம் – உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு விளக்கமறியல் [UPDATE]

(UTV | கொழும்பு) – முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக இன்று கைதான உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

++++++++++++++++++++++++++++++++++  UPDATE @10:40 AM

ஷானி விவகாரம் – உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் கைது

முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்ற விசாரணையின் போது துப்பாக்கி தொடர்பான விசாரணைகளுக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்து சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டில் கடந்த 31ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை இழக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன்

பொலிஸ் பாதுகாப்புடன் அரச காணி பிடிக்க சென்ற ஊடகவியலாளர் – பிரதேச மக்களால் விரட்டியடிப்பு.

பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் ஏற்றப்பட்டுள்ள புதிய மாற்றம்!