சூடான செய்திகள் 1

ஶ்ரீ. சு. கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் – பிரதேச சபையின் உப தலைவர் கைது

(UTV|PUTTALAM)-புத்தளம் – பிரதேச சபையின் உப தலைவர் காவற்துறையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பிரதேச சபைக்குரிய செம்பெட்டேவில் இருந்து வேலாசிய வரை செல்லும் வீதி புனரமைப்பின் போது மதகொன்றை பொருத்துவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியொன்றில் விழுந்து 32 வயதுடைய நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியினை புனரமைப்பு செய்யும் ஒப்பந்தம் இந்த உப தலைவரால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , வீதியை புனரமைக்கும் போது அங்கு எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படாமை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் பிரதேச சபையின் உப தலைவரான ஜயம்பதி பந்துராஜ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

வித்தியா படுகொலை குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனு டிசம்பரில்…

பொது இடங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 படையினரை சேவையில் அமர்த்துவதற்குத் தீர்மானம்

ஐந்து மீனவர்கள் கைது