உலகம்

வௌிநாட்டு மாணவர்களை மீள அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது

(UTV|அமெரிக்கா) -அமெரிக்க அரசாங்கம், இணையத்தளத்தினூடக கல்விகற்கும் வெளிநாட்டு மாணவர்களை மீண்டும் அவர்களது நாட்டுக்கு அனுப்பும் திட்டத்தைக் கைவிட்டுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹவார்ட் பல்கலைக்கழகமும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஒன்றும் வழக்கு தாக்கல் செய்திருந்தன.

இந்தநிலையில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய, சட்டரீதியாக மாணவர் விசாவுடன் அமெரிக்காவில் உள்ளவர்கள், தேவையேற்படின் வகுப்புக்களுக்கு சமூகமளிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கற்பித்தல் நடவடிக்கைகளை முழுவதுமாக இணையத்தளத்தினூடக மேற்கொள்வதற்கான மாற்றங்களை செய்துள்ள கற்கைநெறிகளைப் பயிலும் வௌிநாட்டு மாணவர்கள், அமெரிக்காவை விட்டு வௌியேற வேண்டுமென்று கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எகிப்து எல்லையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம்!

ஆழமாக பிளவுபட்டிருக்கும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தும் நேரம் இது

நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தப் போவதாக ஜோ பைடன் அறிவிப்பு