கேளிக்கை

வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம்

(UTV|இந்தியா) – 4-வது குஞ்சலி மரைக்காரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் சரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.

4-வது குஞ்சலி மரைக்காரரின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.

ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை மார்ச் மாதம் 26-ந்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளத்து பாரம்பரிய உடையுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Related posts

சிவகார்த்திகேயனை தொடர்ந்து அனிருத்தின் புது ஸ்பெஷல்

ராணா திருமணம் – விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

காதலியை மணந்த வில்லன்