வகைப்படுத்தப்படாத

வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக முடங்கிய வைத்தியசாலைகள்

(UDHAYAM, COLOMBO) – அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் சங்கம் நேற்றுக் காலை ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை நடவடிக்கைகள் முடங்கியிருந்தன.

சில கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிகிச்சைகள் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டார்கள்.

எவ்வாறேனும் பல வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைகளும் அத்தியாவசிய சிகிச்சைகளும் இடம்பெற்றன.

அனுராதபுர போதனா வைத்தியசாலை, தியத்தலாவ ஆதார வைத்தியசாலை, அம்பாறை பெரியாஸ்பத்திரி போன்றவற்றில் வெளிநோயாளர் சிகிச்சைகள் இடம்பெறவில்லை. இதன் காரணமாக நோயாளிகள் திருப்பியனுப்பப்பட்டார்கள்.

பல வைத்தியசாலைகளில் பரிசோதனை நடவடிக்கைகளும் தாமதமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ඉන්දීය ක්ෂණික දික්කසාද ක්‍රමය තහනම් කෙරේ

மீண்டும் சுனாமி ஏற்படும் அச்சம்

சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம்